திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் புதிய தலைவர் கருத்துக்கேட்பு கூட்டம், திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள விஜய் பார்க் ஹோட்டலில் நடத்தப்பட்டது. மாநிலத் தலைமையிலிருந்து பொறுப்பாளர்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தி முடிவுகளை அறிவித்தனர்.
அதில் ஜீவானந்தம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜீவானந்தம் தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக திருவண்ணாமலை பாஜகவுக்காக செயல்பட்டுவருகிறார். இவர் தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை பாஜகவின் பொதுச்செயலாளராகவும் இருந்திருக்கிறார்.
ஏற்கனவே தலைவராக இருந்த நேருவின் பதவிக்காலம் முடிவடைந்ததும், அடுத்து புதிய தலைவர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு ஜீவானந்தம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.