ETV Bharat / state

வனவிலங்குகளை வேட்டையாடியதாக 2 பேர் கைது - வனத்துறை

திருவண்ணாமலையில் புள்ளிமான், காட்டுப்பன்றி,முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

arrested
arrested
author img

By

Published : Jan 11, 2022, 10:09 AM IST

திருவண்ணாமலை: சொர கொளத்தூர் காப்புக்காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி மற்றும் முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வன அலுவலர்கள் ஜனவரி 9ஆம் தேதி இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வனவிலங்குகள் வேட்டை

அப்பொழுது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றுள்ளது. அவர்களை வனத்துறை அலுவலர்கள் துரத்திப் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுமன் (31), கானலா பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் வாரம்தோறும் வனவிலங்குகளை வேட்டையாடி கறி விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

வன சட்டத்தின்படி கைது

அவர்களிடம் மான் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, நெத்தி பேட்டரி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

செங்கம் வனத்துறை வழக்குப்பதிவு

அதேபோல் செங்கம் அடுத்த தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ், திமுக கிளை செயலாளரான இவரது நிலத்தில், மான்கொம்பு புதைத்து வைத்திருப்பதாக ெங்கம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவர்கள்

அங்கு சோதனை செய்ததில், அனுமதியில்லாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, தலையுடன் கூடிய இரட்டை மான் கொம்பு ஆகியவை புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அங்கு கூலி வேலை செய்யும் முனுசாமி, வயது (62), என்பவர் மீது மான் கொம்பு வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: suriyur jallikattu: சூடுபிடிக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டுப் பணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.