ETV Bharat / state

மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்! - மதுபான கடைகள்

திருவண்ணாமலை: டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

மனு கொடுத்த பெண்கள்
மனு கொடுத்த பெண்கள்
author img

By

Published : Aug 13, 2020, 5:29 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் நரியாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை புதிதாக திறக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "நரியாப்பட்டு ஊராட்சியிலிருந்து ஏராளமான ஆண் மற்றும் பெண் மாணவர்கள் தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு டாஸ்மாக் கடை அமைய இருக்கும் வழியாக செல்கின்றார். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதியின் அருகில்தான் உள்ளது.

மேலும் அம்மச்சார் அம்மன் கோயில் செல்வதற்கு டாஸ்மாக் கடை அமையவிருக்கும் வழியாகத்தான் பெண்களும் ஆண்களும் செல்கிறோம்.

அதனால் எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை மீண்டும் வந்தால், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும்.

டாஸ்மாக் கடை ஏற்கெனவே இருந்தபோது வீண் கூச்சல், அடிதடி சண்டை சச்சரவுகள் என்று காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

அதனால் மீண்டும் தேவையற்ற இடையூறுகள் ஏற்படாமல் இருக்க எங்கள் நரியாப்பட்டு ஊராட்சிக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை என்று பணிவுடன் ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.