ETV Bharat / state

'அதிமுகவில் பிரிவும் இல்லை பிளவும் இல்லை’ ...முன்னாள் அமைச்சர் பொன்னையன் - திருவண்ணாமலை

அதிமுகவில் பிரிவும் இல்லை பிளவும் இல்லை, 94 சதவீதத்திற்கும் மேல் ஒருங்கிணைந்த அதிமுக-வாக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது, என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன்
முன்னாள் அமைச்சர் பொன்னையன்
author img

By

Published : Nov 26, 2022, 4:12 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன் , “திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு கற்பழிப்புகள் நடைபெற்று வருகிறது.

இவைகள் குறித்து உரிய ஆதாரத்துடன் ஆளுநரிடம் எடப்பாடி கே.பழனிச்சாமி மனு அளித்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் திமுக ஆட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன் அளித்த பேட்டி

திமுக தமிழ்நாட்டில் அவல நிலையில் ஆட்சி செய்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒன்றாக வரும் நிலையை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே ஏற்படுத்தி வருகிறது. தேர்தலில் திமுகவின் முகத்திரை கிழிக்கப்படும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும்" என்றார்.

தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் நேரத்தில் தான் அதிமுகவின் மெகா கூட்டணிகளில் யார் யார் இருப்பார்கள் என தெரியும். இது குறித்து முன்கூட்டியே சொல்ல முடியாது. டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இருப்பாரா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “சூதாட்டம்,கொலை, கொள்ளை, ரம்மி இது போன்ற இளைஞர்களை கெடுக்கக்கூடிய பலவித அட்டூழியங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது, திமுக ஆட்சியில் காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. திமுகவினா் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் பலவித ஓட்டைகள் உள்ளதால் தான் ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ளது பிரிவும் இல்லை பிளவும் இல்லை. 94 சதவீதத்துக்கு மேல் ஒருங்கிணைந்த அதிமுகவாக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.

மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், கொலை கொள்ளை போன்றவை நடைபெறாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியாக தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சி அமைய வேண்டுமென அண்ணாமலையாரிடம் வேண்டியுள்ளேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விளம்பரப் பேனரில் கூட திமுக அரசு ஊழல் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.