ETV Bharat / state

திருமண மண்டபம் யாருக்கு? மோதிக்கொண்ட இந்நாள், முன்னாள் நிர்வாகிகள்!

திருவண்ணாமலை: திருமண மண்டபத்தை நிர்வாகம் செய்வதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் ஒரு தரப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

conflict between the two parties
conflict between the two parties
author img

By

Published : Jan 4, 2021, 10:01 AM IST

திருவண்ணாமலை தேரடி வீதியில் விசுவ பிராமண சமூகத்திற்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.

இந்தத் திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளின் பதவிக்காலம் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

புதிய நிர்வாகிகளுடன் திருமணம் மண்டபம் குறித்த தகவலை ஒப்படைக்கப் பழைய நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆனால் திருமண மண்டப பொறுப்பை ஒப்படைக்கப் பழைய நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திருமண மண்டபத்துக்குப் பூட்டுப் போட்டு புதிய நிர்வாகிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த புதிய நிர்வாகத்தினர் திருவண்ணாமலையில் தேரடி வீதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குச் சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.