ETV Bharat / state

கொதிக்கும் நெய் ... கையால் வடை எடுக்கும் நேர்த்திக்கடன்... - பண்டிதப்பட்டு

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தை ஒருவர் கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து ஆடி மாத நேர்த்திக்கடனை செலுத்தினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2022, 7:20 AM IST

திருவண்ணாமலை: செ.அகரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ.சந்தியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நேற்று(ஆக-16) சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். மேலும், பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனையும் செலுத்தினர்.

திருவண்ணாமலை ஸ்ரீ.சந்தியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா

சின்ன கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது சந்தி அம்மாள் என்ற பெண்,
கடந்த 48 தினங்களாக தொடர் விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுக்கும் நேர்த்திக்கடன் நடைபெற்றது.

இதில் திருக்கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த சட்டியில் ஒவ்வொரு வடையாக தனது இரு கையால் அதனை எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.திருக்கோவிலில் கூடியிருந்த மக்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு சாந்தியம்மளை வழிபட்டனர்.

இதையும் படிங்க: சாதி, மதம் இல்லை எனச்சான்றிதழ்... இரண்டு வாரங்களில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.