ETV Bharat / state

'சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவது கேலிகூத்தான‌ விஷயம்' - தமிழ்மகன் உசேன் - ஈரோடு இடைத்தேர்தல்

சசிகலா மற்றும் ஓபிஸ் அதிமுகவில் இணைப்பது என்னை பொறுத்தவரை கேலிகூத்தான‌ விஷயம் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்
author img

By

Published : Jan 19, 2023, 10:00 AM IST

ஓபிஎஸ் சசிகலாவை விமர்சித்த தமிழ்மகன் உசேன்

திருவண்ணாமலை: வேங்கிக்காலில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்மகன் உசேன், “ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்” என்றார்.

சசிகலா அதிமுக தலைமையை சந்திக்க உள்ளதாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக, அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைவது கேலிகூத்தான‌ விஷயம் என்பது தனது கருத்து” என்றார்.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு.! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.