திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலாடி, மங்கலம் ஆகிய கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனையடுத்து அங்கு இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள் தலா 1 கோடியே, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த கட்டடங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அதனை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மங்கலம் கிராமத்தில் உள்ள புதிய சார்பதிவாளர் அலுவலக விழாவை சட்டப்பேரவை உறுப்பினர் கு. பிச்சாண்டி, குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பதிவாளர் தணிக்கை விஜயலட்சுமி, சார்பதிவாளர் வழிகாட்டி ஜெய்சங்கர், மங்கலம் சார்பதிவாளர் இமயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.