திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமுத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பதவியில் பணியாற்றிவந்த, ரவி குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஜமுனாமுத்தூர் காவல் நிலையத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சல் அதிகரிக்கவே, காவல் நிலைய குடியிருப்பு வளாகத்திலேயே ரவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவல் துறை அலுவலர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.