ETV Bharat / state

திருவண்ணாமலை மலை மீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை! - அண்ணாமலையார் தோஷம்

Tiruvannamalai Annamalaiyar temple: திருவண்ணாமலை மலை மீதுள்ள அண்ணாமலையாரின் பாதத்திற்கு தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும் வகையில், சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது.

அண்ணாமலையார் பாதத்திற்கு தோஷம் நீங்க சிறப்பு பரிகார பூஜை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 11:04 AM IST

அண்ணாமலையார் பாதத்திற்கு தோஷம் நீங்க சிறப்பு பரிகார பூஜை

திருவண்ணாமலை: சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பர் 26ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை பண்டிகையில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, இந்த மகா தீபத்தினை தரிசிக்க 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மலையின் மீது ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

அதன் பின்னர் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் திருவண்ணாமலையில் உள்ள மலையையே சிவனாக காட்சியளிப்பதாகவும், 1008 அடிக்கு லிங்கம் உள்ளது என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இதனால் அப்பகுதியில் பலரும் காலில் செருப்பு அணியாமல் இருப்பதைக் காணமுடியும்.

இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மலையின் மீது பக்தர்கள் சென்று வந்ததாலும், காலடித் தடத்தினால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில், அண்ணாமலையார் மலையின் மீது உள்ள அண்ணாமலையாரின் பாதத்திற்குச் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது.

இதற்காக, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது, கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீப மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மஞ்சள், சந்தனம் போன்ற பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதையும் படிங்க: அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.