திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா இருவரும் வேளாண் பாசனத்திற்காக சாத்தனூர் அணை இடதுபுற கால்வாய் வழியாகத் தண்ணீரைத் திறந்துவைத்தனர்.
இடது புற கால்வாய் வழியாக வினாடிக்கு 270 கனஅடி வீதமும், வலதுபுற கால்வாய் வழியாக 200 கனஅடி வீதம் மொத்தம் 470 கனஅடி தண்ணீர் நேற்று (பிப். 25) முதல் வரும் மே மாதம் 26ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு 90 நாள்கள் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 38 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலம் பாசன வசதி பெறும்.
இதில் சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவிப் பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர், பொதுப்பணித் துறை மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 19 பேர் காயம்!