திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 27-ம் தேதி அண்ணாமலையார் சந்நதியில் உள்ள 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது.
மூன்றாம் நாளான இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் அண்ணாமலையார் கோயிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் 1008 சங்குகளையும் அக்னி தீா்த்த குளத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீாினை ஊற்றி, அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து அண்ணாமலையாருக்கு உச்சிகால வேளையில் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு இந்த புனித நீர் கொடுக்கப்பட்டது. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இந்த சங்காபிஷேகம் நடைபெறுவதாக கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு ..! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு