திருவண்ணாமலை: ஆரணி நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்து, அவர்கள் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
'தற்போது மழைக்காலம் என்று கூட நாங்கள் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், நகராட்சி நிர்வாகத்திற்கு எங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கஷ்டமாக இருக்கிறது' என்று நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வேதனைத் தெரிவித்தனர்.
அப்போது ஊழியர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு நகர மன்றத்தலைவர் சமரசம் செய்ய முயற்சி செய்தார். அதற்கு செவி சாய்க்காத தூய்மைப் பணியாளர்கள் சம்பளம் வழங்கும் வரை வேலைக்குச்செல்லப் போவதில்லை என்று கூறியபடியே, நகராட்சி வளாகத்துக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி!