ETV Bharat / state

ரூ. 7 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது செவிலியர் புகார்! - nurse petition to Tiruvannamalai collectorate

திருவண்ணாமலை: ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு செவிலியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை கைது செய்ய செவிலி கோரிக்கை!
7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை கைது செய்ய செவிலி கோரிக்கை!
author img

By

Published : Feb 8, 2020, 12:52 PM IST

திருவண்ணாமலை வேங்கிக்கால், பூமாரியம்மன் நகரில் வசித்து வரும் நீலாவதி என்பவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பழனி என்பவர் மீது புகார் அளித்தார்.

அதில், திருவண்ணாமலை தென்றல் நகரைச் சேர்ந்த சாந்தி என்பவர் என்னுடன் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் பழனி கார் வாங்க இருப்பதால், கேரண்டராக கையெழுத்திட என்னை வலியுறுத்தினார். பின்னர், திருவண்ணாமலை கலெக்ட்ரேட் பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்துச் சென்று, ஒன்பது நிரப்பப்படாத காசோலைகளை வங்கியில் சமர்பித்து எனது பெயரில் ஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்று கார் வாங்கினார். அந்த காரையும் எனது பெயரில் பதிவு செய்துகொண்டார்.

7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை கைது செய்ய செவிலி கோரிக்கை!

இது தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் கலைவாணியிடம் கேட்டபோது, பழனி என்பவர் உங்களை மனைவி என்று கூறியதால் அவர் பெயரில் வாகனம் பதிவு செய்ய அனுமதித்ததாக தெரிவித்தார். இது குறித்து கிளை மேலாளரிடம், வாகனத்தின் பதிவு எனது பெயருக்கு மாற்றம் செய்யுமாறும் இல்லையென்றால் கடன் தொகையை பழனி பெயருக்கு மாற்றி விடுமாறு கூறினேன்.

இதையும் படிங்க...சுகாதாரமற்ற முறையில் மீன் வளர்ப்பு - ஈ டிவி பாரத்தின் நேரடி கள ஆய்வு!

இது குறித்து பழனி மற்றும் அவரது மனைவி சாந்தியிடம் கேட்டபொழுது, அவர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், ஏழு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து என்னை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் பழனி மற்றும் அவரது மனைவி சாந்தி, வங்கி கிளை மேலாளர் கலைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.

Intro:அரசு செவிலியரிடம் 7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார்தாரர் கோரிக்கை.
Body:அரசு செவிலியரிடம் 7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார்தாரர் கோரிக்கை.

திருவண்ணாமலை அரசு செவிலியரிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகார்தாரர் கோரிக்கை.

திருவண்ணாமலை வேங்கிக்கால், பூமாரியம்மன் நகரில் வசித்து வரும் நீலாவதி என்பவர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பழனி என்பவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் திருவண்ணாமலை தென்றல் நகரைச் சேர்ந்த சாந்தி என்பவர் தன்னுடன் பணி செய்து வருவதாகவும், அவருடைய கணவர் பழனி என்பவர் தான் கார் வாங்க இருப்பதாகவும், அதற்கு கேரண்ட்டராக கையெழுத்து இடும்படியாக என்னிடம் கேட்டுக் கொண்டதின் பேரில், திருவண்ணாமலை கலெக்ட்ரேட் பாரத ஸ்டேட் வங்கிக்கு என்னை அழைத்துச் சென்று என்னிடமிருந்து ஒன்பது நிரப்பப்படாத காசோலைகளை பெற்று வங்கியில் சமர்பித்து என் பெயரில் 7 லட்சம் ரூபாய் கடன் பெற்று கார் வாங்கினார். அந்த வாகனத்தின் பதிவினை தன் பெயரில் பதிவு செய்துகொண்டார். இது தெரிந்து நான் வங்கிக்குச் சென்று வங்கியின் கிளை மேலாளர் கலைவாணி அவர்களிடம் கேட்டபோது பழனி என்பவர் உங்களை தன் மனைவி என்று கூறியதால் அவர் பெயரில் வாகனம் பதிவு செய்ய அனுமதித்ததாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் கிளை மேலாளரிடம் வாகனத்தின் பதிவு எனது பெயருக்கு மாற்றம் செய்யுமாறும் இல்லையென்றால் லோன் தொகையினை பழனி பெயருக்கு மாற்றி விடுமாறு கூறினேன். இதனை தொடர்ந்து பழனி மற்றும் அவரது மனைவி சாந்தியிடம் கேட்டபொழுது அவர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டினர் ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அம்மனு மீது காவல்துறையினர் ஏழு மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் உடனடியாக அம்மனு மீது நடவடிக்கை எடுத்து தன்னை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் புரோக்கர் பழனி மற்றும் அவரது மனைவி சாந்தி வங்கி கிளை மேலாளர் கலைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.

Conclusion:அரசு செவிலியரிடம் 7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க புகார்தாரர் கோரிக்கை.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.