திருவண்ணாமலை: இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் கார்த்திகைத் திருநாள் (Karthigai Deepam) முக்கியமானது. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், சிவபெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்த நாளே கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் வீடுகள், கோயில்களில் சிறப்பு தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவர். அந்த வகையில் இந்தாண்டு கார்த்திகை தீப திருநாள் நவ.19ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இந்தநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகுவிமர்சையாக கொண்டப்படும்.
இதனை முன்னிட்டு, நவ.19ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், டிச.4ஆம் தேதி பணிநாளாக கருதப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.14 முதல் கார்த்திகை உற்சவம்!