திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம், மல்லவாடி, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர் மேலும் திருவண்ணாமலை நகரைச் சுற்றி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு விடிய விடிய பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து தற்போதுவரை இரவு நேரங்களில் வேலூரில் பல இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வேலூரின் பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. அதன்படி வேலூர் நகர், சத்துவாச்சாரி, காட்பாடி லத்தேரி, ராணிப்பேட்டை, வாலாஜா உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் வேலூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.