ETV Bharat / state

சித்திரைப் பட்டம் நிலக்கடலை விதைப்புப் பணி - மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்

author img

By

Published : May 23, 2020, 2:28 AM IST

திருவண்ணாமலை: நிலக்கடலை விதைப்புப் பணிக்கு விவசாயிகள் வேகமாக தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்
மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்

திருவண்ணாமலை, விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு மாவட்டமாகும். திருவண்ணாமலை அடுத்த மங்கலம் பகுதியில் விவசாயிகள் தற்போது சித்திரைப்பட்டம் நிலக்கடலை விதைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் டிராக்டர் மூலம் மணிலா (நிலக்கடலை) விதைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால், வீட்டில் உள்ளவர்களே மணிலா (நிலக்கடலை) மேல் தோல் நீக்கி, தரமான கடலைகளை தரம் பிரித்து, விதைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

நிலக்கடலை விதைப்பு பணி
நிலக்கடலை விதைப்புப் பணி

இதற்கு முன் சாதாரண காலங்களில் மணிலா உடைப்பு இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு, பயிரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'ஆண்டிற்கு இரண்டு முறை மணிலா (நிலக்கடலை) பயிர் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது உள்ள சித்திரைப்பட்டத்தில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். ஆடிப்பட்டத்தில் வானம் பார்த்த மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்படும். இந்த இரண்டு பட்டங்களில் மட்டுமே மணிலா (நிலக்கடலை) பயிர் பெரும்பாலும் விவசாயிகளால் பயிரிடப்படுவது வழக்கம்.

மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்
மும்முரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகள்

மேலும் மணிலா(நிலக்கடலை) பயிருக்கு அடுத்து, நெல் பயிரிட்டு மண்ணின் தன்மையை மாற்றுவதற்கு மாற்றி மாற்றி இதனைப் பயிரிடுவோம்.

இந்தப் பருவ காலங்களில் பயிரிடுவதால், மண்ணின் தன்மை மாறி, சத்துக்கள் பயிர்களுக்குச் செல்லும், நோய்த் தாக்கம் குறையும், மகசூல் அதிகமாக இருக்கும்' என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.