திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசு துறைகளில் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஓய்வுத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவி ஆய்வாளர், எம்ஆர்பி செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று (பிப். 8) ஏழாவது நாளாக கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 170 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க... கஞ்சா வியாபாரி தாக்கப்பட்ட வழக்கு கொலைவழக்காக மாற்றம்- வெளியான வீடியோ காட்சி