ETV Bharat / state

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி பொதுமக்களிடமிருந்து 80 லட்ச ரூபாய் பண மோசடி... - public

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து 80லட்ச ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 11, 2022, 6:54 PM IST

திருவண்ணாமலை: செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியார் அறக்கட்டளையை நடத்தி வருபவர் பாலாஜி. இவருடன், சென்னை வந்தவாசி அருகேயுள்ள, சென்னாவரம் கிராம நிதி உதவி பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ் உட்பட மூன்று பேர், வந்தவாசி சுற்றியுள்ள அம்மணம்பாக்கம், கெங்கம்பூண்டி, கல்லாங்குத்து, கள்ளப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் 1,250 ரூபாய் வசூல் செய்து, குறிப்பிட்ட நபர்களுக்குத் தையல் எந்திரம், ஆடு, மாடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கின்றனர்.

இதைக் கண்டு பொதுமக்கள், அவர்களிடம் மேலும் பணம் கட்ட தொடங்கியுள்ளனர். இதில், 7,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் 1,250 ரூபாய் விதம், 80 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்கள். இந்தப் பணம் அனைத்தையும், நிதி உதவி பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி தாஸ் வசூல் செய்து, செங்கல்பட்டைச் சேர்ந்த பாலாஜியிடம் கொடுக்கப்பட்டு, வீரமங்கை அறக்கட்டளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணத்தைக் கட்டியவர்கள் நீண்ட நாளாகியும் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாததால், அந்தோணி தாஸிடம் சென்று கேட்டுள்ளனர். இதற்கு, அந்தோணி தாஸ் அளித்த பதில் பொதுமக்களுக்குத் திருப்தி அளிக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் தெள்ளார் காவல் நிலையத்தில் அந்தோணி தாஸ் மீது புகார் அளித்துள்ளனர்.

நலத்திட்ட உதவிகள் தருவதாகக் கூறி 80 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பண மோசடி

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.