ETV Bharat / state

திருவண்ணாமலையில் தரமான சாலை அமைப்பது யார்..? போட்டா போட்டி போடும் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் - inaugurated the cement road in Ward 16 of

திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்குள் பொதுமக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவது யார்? என எழுந்துள்ள போட்டியின் நடுவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 16-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலையில் பல லட்ச ரூபாய் செலவில் சிமெண்ட் சாலைகள் திரப்பு

author img

By

Published : Jun 6, 2023, 4:03 PM IST

Updated : Jun 6, 2023, 4:36 PM IST

16-வது வார்டில் சிமெண்ட் சாலையை திறந்து வைத்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை: நகராட்சியின் 16-வது வார்டு பகுதியின் கவுன்சிலராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பர் இருந்து வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியில் ரூ.30 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வந்த சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து, அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன் 5) திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு பகுதியில் கடம்பராயன் தெரு உள்ளது. நகைக் கடைகளால் நிறைந்த இந்த தெருவில் தங்க நகை வியாபாரிகள், தங்க நகை ஆசாரி வேலை செய்பவர்கள் எனப் பலரும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆங்காங்கே பல நகை அடகு கடைகளும் உள்ளன.

இந்த நிலையில், மிகவும் குறுகலாக இருந்த இந்த தெருக்களின் சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இந்த சாலைகளை அகலப்படுத்தும் பணி, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து இப்பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த சாலையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் நகைக் கடைகள் அதிகமான பகுதி என்பதால் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரின் பல பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள பல கிராமங்களில் இருந்து பலரும் இப்பகுதியில் உள்ள நகை அடகு கடைகளுக்கு நகைகள் அடமானம் வைக்க வந்து செல்கின்றனர். இதனிடையே, மற்றொரு பிரச்னையை தீர்த்துவைக்கும் விதமாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்ட நிலையை தவிர்ப்பதற்காக, குப்பைத் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் முதலமைச்சர் வருகை: பூ மார்க்கெட் கடைகளை இடித்துத் தள்ளிய அதிகாரிகள்!

மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொது தண்ணீர் தொட்டிகளும் திறக்கப்பட்டுள்ளன. 16-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ் மற்றும் நகை வியாபாரிகள் இணைந்து இத்தகைய வசதிகளை இந்த சாலையில் ஏற்படுத்தி உள்ளனர். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 38 வார்டுகளுக்கும் இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16-வது வார்டு பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த இத்தகைய வசதிகளை, நகர் மன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ் உட்பட அப்பகுதியில் உள்ள நகை வியாபாரிகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் நகராட்சியில் உள்ள 38 வார்டுகளிலும் இத்தகைய வசதிகள் செய்து தருவதில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் பலருக்கும் இடையே யார் மக்களின் வசதிக்காக சிறப்பான பணிகளை மேற்கொள்வது? என்று கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாகவே, இந்த 16-வது வார்டு பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ் திறம்பட இந்த திட்டங்களை செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

இதனிடையே, நகராட்சியின் பிற வார்டுகளிலும் ஏற்பட்ட போட்டியின் விளைவாகவே, 16-வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலைகள், குப்பைத்தொட்டிகள், மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய், பொது தண்ணீர் தொட்டிகள், முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்திலேயே முதன்முறையாக..ஏசியுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிழற்குடை!

Last Updated : Jun 6, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.