ETV Bharat / state

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான்: மீட்ட தீயணைப்புத் துறை! - tamil news

திருவண்ணாமலை: 60 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமானை, உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By

Published : May 9, 2020, 1:57 PM IST

கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மயில், மான், முயல் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், அச்சமயத்தில் சாலைகளில் கடக்கும்போது விபத்து ஏற்படுவது, தெருநாய்களுடன் சண்டை, கிணற்றில் தவறிவிழுவது போன்ற பாதிப்புகள் வன விலங்குகளுக்கு ஏற்படும்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தில் விவசாயி முரளி என்பவரின் 60 அடி ஆழ கிணற்றில், இரவு தண்ணீர் தேடிவந்த புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதை, அதிகாலை பார்த்த முரளி, தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் அளித்தார்.

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கயிற்றின் மூலம் புள்ளிமானின் கால்களை இறுக்கமாகக் கட்டி மானுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர், இதையடுத்து, வனத் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் புள்ளிமானை பத்திரமாக விட்டனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.