திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் குரங்குகளை மயக்க மருந்து வைத்து பிடிப்பதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் தேங்காயில் விஷத்தன்மையுள்ள மயக்க மருந்து தடவி குரங்குகளை பிடிப்பதற்காக கோயிலுக்கு அருகாமையில் வைத்துள்ளனர்.
இந்த மயக்க மருந்து தடவப்பட்ட தேங்காய்களை கோயிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு சிறுவர், சிறுமிகள் எடுத்து சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களையும். சிறுமிகளையும் கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து சிறுவர்களின் உடல் நிலையை சரி செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 97 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்