ETV Bharat / state

நண்பர்களுடன் குளியல்... ஏரியில் சிக்கிக்கொண்ட சிறுவன் உயிரிழப்பு! - Children died while bath at Lake in tiruvannamalai

திருவண்ணாமலை: ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன், சேற்றில் சிக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

children
திருவண்ணாமலை
author img

By

Published : Mar 7, 2021, 9:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (48).

இவரது மகன் உதயகுமார்(7) அரசு தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிலிருந்த உதயகுமார், தனது நண்பர்களுடன் நேற்று(மார்ச்.6) மாலை, ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சேற்றில் சிக்கிக்கொண்ட உதயகுமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உதயகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தச்சம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில்களின் பூட்டை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.