திருவண்ணாமலை: திருவண்ணாமலையின் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்கள், கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும் ஐந்து சிறிய கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்களுடன் தனிச்சிறப்பு பெற்று அமைந்துள்ளது.
சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலக்கட்டத்தில் இந்த திருக்கோயில் கட்டப்பட்டதாக சங்க காலத்து நூல்களும், இந்தக் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், சிறப்பு வாய்ந்த அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் 17ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் என்பதை, வராலாற்றுக் குறிப்புகள் ஒரு போதும் உலகுக்கு வெளிப்படுத்த மறந்ததில்லை. இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது. அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தின் வெளிப்புறம் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலை அமைந்துள்ளது, இதன் சிறப்பசங்களாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்மனி அம்மாள் கோபுரத்தில் இருக்கும் பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதி உடைந்து இன்று கீழே விழுந்துள்ளது. இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2016ஆம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோயிலின் ராஜகோபுரத்தில் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வல்லுநர் குழுக்களை கொண்டு அதனை சரி செய்தனர். பின்னர், 2017ஆம் ஆண்டு குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இந்து சமய அறந்நிலையத் துறையால் இந்த விரிசலும் விரைந்து சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதிகள் உடைந்து கீழே விழுந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோயிலில் வல்லுநர் குழுக்களைக் கொண்டு கோயில் கோபுரங்களின் உறுதித் தன்மையையும், கோபுரங்களில் அமைந்துள்ள சிலைகளின் பாதுகாப்பையும் இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Tamil Today Rasipalan : உங்களை நேசிப்பது போல பிறரையும் நேசியுங்கள்! அவர் உங்களை வெறுப்பவராயினும்!