திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்துள்ளார். இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஏழுமலையை கைது செய்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராணி குற்றவாளி ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.