திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் தூரமுள்ள மலையை கிரிவலம் வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாத பவுர்ணமியையொட்டி எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு: வருகிற 11ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோயில் தரிசன டிக்கெட் வழங்குவதில் மோசடி - ஊழியர்கள் சஸ்பெண்ட்!