திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களும் வெகு விமர்சையாக காலை மற்றும் இரவில் சுவாமிகளின் மாட வீதியுலாவுடன் நடைபெற்றது.
கடந்த டிச.6ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவ விழா டிச. 7ஆம் தேதி தொடங்கியது. சுந்திரசேகரர், பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்று முடிந்து 3ஆம் நாளான நேற்று வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசணம் செய்தனர்.
மேலும் இன்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது.
இதையும் படிங்க: கனமழையிலும் சுடர் விட்டு எரியும் அண்ணாமலையார் தீபம் - வீடியோ!