திருவண்ணாமலை: தண்டராம்பட்டு தாலுகா, குபேரபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் போஜன். இவர் கூலித்தொழிலாளி. இவரது மகள் தனுசுயா (3). நேற்று முன்தினம் மாலை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எதிர்பாராதவிதமாக விழுங்கிவிட்டார். இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி மயங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். தொண்டையின் ஆபத்தான பகுதியில் நாணயம் சிக்கியிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள் பி.சிந்துமதி எம்.ஆர்.கே.ராஜா செல்வம் , மயக்கவியல் மருத்துவர் திவாகர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், சுமார் ஐந்து மணி நேரம் கடும் முயற்சிக்கு ஈடுபட்டுனர்.
பிறகு, தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை, என்டோஸ்கோப் சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சையில்லாமல் வெளியே எடுத்தனர். தற்போது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: குஜராத்தில் கரோனாவை வென்ற தன்னம்பிக்கை பெண்மணி!