திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் இலங்கை அகதிகளாக வசிக்கும் ராஜா - செங்குழி தம்பதியரின் மகன் விஷால். இவர் அம்பத்தூரில் இயங்கி வரும் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று (ஜூலை 27) கல்லூரி இயங்கிய நிலையில் விஷால் கல்லூரிக்கு செல்லாமல் சுற்றியதால் விபரீத நிலைக்குப் போகும் நிலை உருவானது.
கல்லூரியில் பயிலும் சக நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ள ராக்கி திரையரங்கில் மாமன்னன் படம் பார்த்த பின்னர், மது அருந்திவிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ரயிலில் பயணித்துள்ளார், விஷால். மது போதையில் விஷால், திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து படியில் தொங்கியவாறு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் இளைஞர் தற்கொலை - ரயில்வே போலீசார் விசாரணை
இந்த நிலையில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி ஏறும் பொழுது மது போதையில் நிலை தடுமாறி கால் சறுக்கி ரயிலுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்த பயணிகள் விஷாலை உடனடியாக மீட்டுள்ளனர். இதனால் அவருக்கு உயிர் சேதம் இல்லாத நிலையில் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Erode -வட்டி இல்லாத கடன் வழங்குவதாக பெண்களிடம் மோசடி; கடன் நிறுவனம் முற்றுகை
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷாலின் நண்பர்கள் அவரை உடனடியாக திருவள்ளூர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து உள்ளனர். ரயிலில் இருந்து விழுந்ததில் தலையில் பத்திற்கு மேற்பட்ட தையல் போட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் வயதில் போதைக்கு அடிமையாகி ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவனின் சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இதைப் போன்ற சம்பவங்கள் நடக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அத்திப்பட்டி போல் மாயமான 5 கிராமங்கள்.. வாக்குரிமை இருந்தும் நிர்கதியாய் நிற்கும் மக்கள்!