திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றிவருக்கிறார்.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சிவகார்த்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த கத்தி, தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.