ETV Bharat / state

2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்!

திருவள்ளூர்: இரண்டு மாத ஊதியம் வழங்காததை கண்டித்து சென்னை குடிநீர் வாரியத்தை கண்டித்து வாரிய கட்டிடத்தின் மீது ஏறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் போராட்டம்
author img

By

Published : Apr 27, 2019, 9:35 AM IST

சென்னைக்கு குடிநீர் வழங்கிவரும் வீராணம் திட்டத்திற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் வீராணம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்கவில்லை என 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது ஒரு சிலர் திடீரென சென்னை குடிநீர் வாரிய கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேசிய போராட்ட குழு தலைவர், "வீராணம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். எங்களுக்கு வழங்க வேண்டிய பயண படி மற்றும் இதர சலுகைகள் ஏதும் முறையாக வழங்கவில்லை. இதனை போன்று எங்களுக்கு தரவேண்டிய இரண்டு மாத ஊதியத்தை தராமல் அலைக்கழிக்கின்றனர். எனவே நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

அப்படி வழங்காதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக காலவரையற்ற வேலைநிறுத்தில் குடும்பத்துடன் ஈடுபடுவோம்” என்றார். சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Intro:2மாத ஊதியம் வழங்காததை கண்டித்து சென்னை குடிநீர் வாரிய கட்டிடத்தின் மீது ஏறி ஊழியர்கள் போராட்டம்

Body:சென்னைக்கு குடிநீர் வழங்கிவரும் வீராணம் திட்டத்திற்கு 2 தனியார் நிறுவனங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் வீராணம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் தங்களுக்கு 2மாத ஊதியம் வழங்கவில்லை.இதனை கண்டித்து 30கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது ஒரு சிலர் திடீரென சென்னை குடிநீர் வாரிய கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:பின்னர் பேசிய போராட்ட குழு தலைவர் பேசிய போது வீராணம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 200கும் அதிகமானோர் பணிபுரிந்து வருவதாகவும் தங்களுக்கு தர வேண்டிய பயண படி மற்றும் இதர சலுகைகள் ஏதும் முறையாக வழங்கவில்லை.இதனை போன்று எங்களுக்கு தரவேண்டிய 2மாத ஊதியத்தை தராமல் அலைக்கழிப்பதாகவும் தெரிவித்தனர்.நிலுவையில் உள்ள 2மாத ஊதியத்தை வழங்க வேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக காலவரையற்ற வேலைநிறுத்தில் குடும்பத்துடன் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.