திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன், "தற்போது பூண்டி ஏரிக்கு 3,200 கன அடி நீர்வரத்து உள்ளது. ஆனால் வெளியேற்றப்படும் நீரின் ளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது.
கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிக கன மழை பொழியும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பூண்டி ஏரி முழுவதும் நிரம்புவதை தவிர்க்க தற்போது கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் விரயமாவதை தடுக்க வரும் காலங்களில் 100 தடுப்பணைகள் கட்ட திட்டம் உள்ளது" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு