வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆறு வழியாக கடலுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடி. தற்போது 34.2 அடி நீர்மட்டம் உள்ளது. மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
இதனால் இன்று (டிச.5) மாலை பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் இன்று இரவுக்குள் தண்ணீர் திறப்பு அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உயர்த்தலாம் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ!