ETV Bharat / state

மின்இணைப்பு வழங்கக் கோரி விசிக ஆர்ப்பாட்டம் - vandalur

திருவள்ளூர்: ஆவடி அருகே நான்காண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 7, 2019, 3:49 AM IST

சென்னை வெளிவட்ட சாலையான வண்டலூர்- மீஞ்சூர் 400அடி தேசிய நெடுஞ்சாலைகாக மாற்ற வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆவடி பட்டாபிராம் அருகே சாஸ்திரி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு அதற்கு மாற்றாக மோரை கிராமம் ஜே.ஜே.நகரில் நிலம் வழங்கப்பட்டது.

இதையடுத்து வீடுகளை இழந்தோர் அங்கு வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றனர். ஆனால், நிலம் வழங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை மின்இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமலும், மக்கள் கொசுக்கடியில் சிக்கித் தவித்தும் வருகின்றனர்.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவுரி சங்கர் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

Intro:ஆவடி அருகே 4 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு மின் இணப்புகள் வழங்ககோரி 100 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்Body:சென்னை வெளிவட்ட சாலையான வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி தேசிய நெடுஞ்சாலைக்காக வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில் ஆவடி பட்டாபிராம் அருகே சாஸ்திரி நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.பின்னர் அவர்களுக்கு மாற்றாக ஆவடி அடுத்த மோரை கிராமம் ஜே.ஜே.நகரில் நிலம் வழங்கப்பட்டது.இதனை அடுத்து வீடுகள் இழந்த சுமார் 97 குடும்பங்கள் அங்கு வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். நிலம் வழங்கி 4 ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் போவதுடன் கொசுக்கடி,பூச்சுத் தொல்லை சிக்கி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தனி செயலாளர் இளம்சேகுவேரா கண்டன உரையாற்றினார்.வில்லியம் ஒன்றிய வடக்கு பகுதி செயலாளர் ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.உடனடியாக மாவட்டம் நிர்வாகம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் வழங்கினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.