ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்! - mandous cyclone effects in gummidipoondi

மாண்டஸ் புயலினால், கும்மிடிப்பூண்டி அருகே 20 ஏக்கர் அளவில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகே 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

author img

By

Published : Dec 10, 2022, 12:47 PM IST

திருவள்ளூர்: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், இன்று (டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது ஏற்பட்ட அதிக மழை மற்றும் பலத்த காற்றால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையோர மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

தற்போது இதனை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் ஊராட்சி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு செய்து பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மாண்டஸ் புயலினால் கும்மிடிப்பூண்டி அருகே 20 ஏக்கர் அளவில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.