ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்... மனைவி கழுத்தறுத்து கொலை! - நடத்தையில் சந்தேகம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காவல் துறையினரிடம் கணவர் சரணடந்துள்ளார்.

மனைவி கழுதறுத்து கொலை
author img

By

Published : Oct 15, 2019, 7:45 AM IST

பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் கிட்டப்பன்(35). இவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுமதி(29) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கிட்டப்பனுக்கு மனைவி சுமதியின் நடத்தை மீது சந்தேகம் இருந்துவந்துள்ளது.

இதனால் சில ஆண்டுகளாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், கடந்த பத்து மாதங்களாக சுமதி தனது தாய் வீட்டில் உள்ளார். கணவன், மனைவி இடையே தகராறு குறித்து பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை கிட்டப்பன் வீட்டிற்குச் சென்ற சுமதியை, தலையில் சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் கிட்டப்பன். பின்னர் அங்கிருந்து தப்பிய அவர், சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

நடத்தையில் சந்தேகம்; மனைவி கழுத்தறுத்து கொலை!

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூவிருந்தவல்லி காவல் துறையினர், சுமதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இதனிடையே கிட்டப்பன் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கணவனே மனைவியைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுமதிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். இதில் ஒரு தங்கையும் சுமதி போன்றே கணவரால் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:பூந்தமல்லி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீசில் சரண்Body:பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம் அம்மன் நகரை சேர்ந்தவர் கிட்டப்பன்/35 இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுமதி/29 என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.கடந்த ஒரு சில ஆண்டுகளாக கிட்டப்பனுக்கு மனைவி சுமதி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி கடந்த பத்து மாதமாக அவரது தாய் வீட்டில் உள்ளார்.கணவன், மனைவி இடையே தகராறு குறித்து பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று காலை கிட்டப்பன் வீட்டிற்கு சென்ற சுமதியை அவரது கணவன் தலையில் சுத்தியால் அடித்தும்,கத்தியால் கழுத்தை அறுத்து உள்ளார்.பின்னர் அங்கிருந்து கிட்டப்பன் தப்பி சென்றுவிட்டார்.சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.Conclusion:இதனை அடுத்து தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூவிருந்தவல்லி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதனிடையே கிட்டப்பன் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்யப்பட்ட சுமதிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர்.இதில் ஒரு தங்கையும் சுமதி போன்றே கனவரால் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.