ETV Bharat / state

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா கொண்டாட்டம்

திருவள்ளூர்: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா

author img

By

Published : Feb 7, 2020, 4:02 PM IST

திருவள்ளூரில் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முதலில் மூலவருக்கு எதிரேயுள்ள நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சென்னை, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திர மாநிலம் நாகலாபுரம், சித்தூர், புத்தூர், நகரி சுற்றுவட்டாரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் அபிஷேக ஆராதனையில் பங்கேற்றனர்.

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ விழா

இக்கோயில் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழில் அர்ச்சனை நடைபெறுவது மிகச் சிறப்பாகும். சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் அலங்காரமும் சிறப்பாக நடந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி, நந்தி, சிவபெருமான் மற்றும் பள்ளிகொண்டேஸ்வரர் சுவாமிகளை வணங்கி அருள் பெற்றனர்.

இதையும் படிங்க: 'பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல' - சீமான்

Intro:திருவள்ளூர்:

தமிழக ஆந்திர எல்லையில் அமைந்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழில் அர்ச்சனை நடப்பதால் பக்தர்கள் மெய்சிலிர்க்க பிரதோஷ விழாவில் பங்கேற்று வழிபட்டனர்

Body:திருவள்ளூர்:

தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி யில் அமைந்த அருள்மிகு சர்வ மங்களாம்பிகை சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு எதிரேயுள்ள நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வாசனைத் திரவியங்களும் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் சென்னை பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் சித்தூர் புத்தூர் நகரி சுற்றுவட்டாரங்களில் சேர்ந்த திரளான பக்தர்கள் அபிஷேக ஆராதனையில் பங்கேற்று பிரதோஷ பலன் பெற்றனர்

ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு.
சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் அலங்காரமும் சிறப்பாக நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி நந்தி சிவபெருமான் பள்ளிகொண்டேஸ்வரர் சுவாமிகளை வணங்கி அருள் பெற்றனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.