திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான முருகன் கோயிலில் முதன்மையான கோயிலாகும்.
இந்த திருக்கோயிலின் தலைமை அலுவலகம் திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ராஜேந்திரன் என்ற திருக்கோயில் பணியாளர், பணி நேரத்தில் மது போதையில் இருந்துள்ளார். இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இதனை தட்டிக் கேட்காத கோயில் துணை ஆணையர் விஜயா மீது முருக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பணி நேரத்தில் மது போதையில் இருந்த கோயில் ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற நடவடிக்கையால் திருக்கோயில் மேல் உள்ள மதிப்பு அலுவலர்களால் மாறிவிடுகிறது என்று பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்து அறநிலையத்துறை திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் மீதும், பணி நேரத்தில் மது போதையில் இருந்த பணியாளர் மீதும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் சைட் டிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை