இது குறித்து அவர் வெளியிட்ட காணொலி பதிவில், "சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதனையொட்டியுள்ள பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈக்காடு, பூந்தமல்லி, சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகைக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையம், மருந்தகங்கள் உள்ளிட்டவை மட்டும் திறக்கப்படும். அவற்றை வாங்க வரும் பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, நடந்துசென்று மட்டுமே வாங்கி வர வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையம், மருந்தகங்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். மளிகைக் கடைகள் காலை 6 மணிமுதல் 2 மணிவரை திறந்திருக்கும்.
வரும் ஜூன் 21, 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 'உரிய ஆவணங்கள் இன்றி காஞ்சிபுரத்திற்கு யாரும் வர வேண்டாம்' - டிஎஸ்பி