ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதல் அவசர ஊர்தி ஓட்டுநராக அவதாரம் எடுத்திருக்கும் வீரலட்சுமியின் பயணம்! - வீரமங்கை வீரலட்சுமியின் அவசர ஊர்தி பயணம்

பெண்கள் அச்சப்படாமல் தைரியமாக முன்வந்தால், எந்த தொழிலிலும் சாதிக்கலாம் என தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக அவசர ஊர்தி ஓட்டுநராக பணி அமர்த்தப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பெண்மணி வீரலட்சுமி கூறுகிறார்.

tamilnadu first ambulance lady driver
tamilnadu first ambulance lady driver
author img

By

Published : Sep 24, 2020, 8:23 AM IST

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டிலேயே முதல் பெண் 108 அவசர ஊர்தி ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ளார், வீரலட்சுமி. இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும் இவரது கணவருடன் பிழைப்புக்காக தேனியிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்திருக்கிறார், வீரலட்சுமி. வருமானமும் போதாமல் இருந்துள்ளது.

அதனைப் போக்க அரசுப் பள்ளியில் பிள்ளைகள் இருவரையும் சேர்த்துவிட்டு, தானும் கணவருடன் சேர்ந்து வாடகைக் கார் ஓட்டுநராக மாறினார், சாதனைப் பெண் வீரலட்சுமி. கரோனா காலத்தின் சந்தர்ப்பமோ; தேவையோ தெரியவில்லை. வீரலட்சுமியின் கண்ணில் பட்டது, சென்னையில் அவசர ஊர்தி ஓட்டுநருக்கான தேர்வு படிவம்.

விண்ணப்பித்து தான் பார்போம் என்று, அப்பணிக்கு வீரலட்சுமி விண்ணப்பிக்க, அந்த வேலையே அவருக்கு கை கூடியது. பல எதிர்பார்ப்புகளுடன் தன் பணியை மேற்கொள்ள புறப்பட்டார், வீரலட்சுமி.

tamilnadu first ambulance lady driver
தமிழ்நாட்டின் முதல் பெண் அவசர ஊர்தி ஓட்டுநர்

அவசர ஊர்தி ஓட்டுநர் பணி:

அவசர ஊர்தி ஓட்டுவது என்பது எளிதான காரியமில்லை. வாகனத்தை வேகமாக செலுத்த வேண்டும், காயமடைந்தவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. ரத்தம் வடிய கிடக்கும் காயப்பட்டவர்களை, எவ்வித சுணக்கமும் இன்றி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற பல சவால்கள் அவசர ஊர்தி ஓட்டுநர்களுக்குண்டு. இதனால் தான் இந்தத் தொழிலுக்கு வர ஆண்கள் கூட பெரிதும் விரும்புவதில்லை. அதுவும் கரோனா காலம் என்றால், இச்சேவையை பல ஓட்டுநர்கள் புறக்கணிப்பர். இது தொடர்பாக அனைத்தும் தனக்கு விளக்கப்பட்டது என்றும்; இச்சேவையை செய்ய நான் தயாராக இருப்பதாகவும்; பணி நேர்காணலில் அலுவலர்களிடம் தெரிவித்ததாக வீரலட்சுமி கூறுகிறார்.

அயலார் தூற்று:

பெண் வாகன ஓட்டுநர் என்றாலே அயலார் பேச்சுக்கு ஆளாக வேண்டியதிருக்கும். அதுபோல தனக்கும் பெரும் தடங்கல்கள் இருந்ததாக வீரலட்சுமி தெரிவிக்கிறார். அனைத்திற்கு மேலாக கணவர் தனக்கு பக்கபலமாக இருப்பதாக சிலிர்க்கிறார், அவர். வாகன ஓட்டுநரானபோதே இது தேவையில்லாத வேலை என்று உறவினர்களும், அயல்வாசிகளும் வசைபாடினர். அவசர ஊர்தி ஓட்டுநர் என்றால் சொல்லவா வேண்டும்!

வீரமங்கை வீரலட்சுமியின் அவசர ஊர்தி பயணம்!

எந்த தொழிலும் சாத்தியமே...

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இதை நம்மால் செய்ய முடியுமா என்ற எண்ணத்தைக் களைந்து, 'முயன்றால் எதுவும் சாத்தியமே' என்பதை பெண்கள் உணர்த்தி வருகின்றனர். தன்னைக் கண்டு பல பெண்கள் இந்த தொழிலுக்கு வர தங்களுக்காக உத்வேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு சகிப்புத்தன்மையுடன் நேர்த்தியாக அனைத்தையும் அணுகினால், நினைத்தது கைகூடும் என்று முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு வலுவூட்டுகிறார், வீரமங்கை வீரலட்சுமி...!

இதையும் படிங்க: நாள்தோறும் 200 பேருக்கு உணவு... கரோனா காலத்தில் எளியோருக்கு உதவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.