ETV Bharat / state

நேபாளம் சென்ற தமிழ்நாடு வாலிபால் வீரர் மரணம்: உடலை கொண்டுவர கோரிக்கை - உடலை கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை

வாலிபால் விளையாட நேபாளம் சென்ற தமிழ்நாடு வீரர் மரணமடைந்த நிலையில், உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வாலிபால் வீரர் மரணம்
தமிழ்நாடு வாலிபால் வீரர் மரணம்
author img

By

Published : Dec 27, 2022, 10:00 AM IST

தமிழ்நாடு வாலிபால் வீரர் மரணம்

திருவள்ளூர்: நேபாள நாட்டின் போக்ரா நகர ரங்கசாலா பகுதியில் நடைபெற்ற வாலிபால் பேட்டியில் கடந்த 21 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் தனியார் யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் தலைமையில் 20 பேர் பங்கேற்க சென்றனர்.

அந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் (27) என்பவர் நேற்று (டிச. 26) காலை 8 மணியளவில் நேபாள அணிக்கும் யூ.எஸ்.ஏ கிளப் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார். முதல் சுற்று விளையாடி முடித்தார்.

பின்னர் ஓய்வெடுக்க சென்றிருந்த அவர் திடீரென 11 மணியளவில் இரண்டு முறை வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அவரை சக நண்பர்கள், யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் நாகராஜ் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், உடலை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இத்தகவல் ஆகாஷின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரிய வந்ததால், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை தமிழ்நாடு கொண்டுவரவும் கோரிக்கை விடுத்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என திருவள்ளூர் தாசில்தார் மதியழகனிடம் இறந்தவரின் தம்பி ஆதவன் மனு அளித்தார்.

விளையாட்டு முடிந்து 29ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு 31 ஆம் தேதி ஆகாஷ் வீடு திரும்புவதாக இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தால் ஆகாஷ், பி.இ படித்துவிட்டு பி.பி.எட் முடித்த பின் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துகள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.