திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே.எஸ் சாலையில் இரவு பகலாக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் (ஏப்.10) நள்ளிரவில் வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி பரிசோதனை செய்தனர்.
அப்போது, சொகுசு காரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 96 துண்டுகள் அடங்கிய 75 கிலோ சந்தனக்கட்டைகள் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் கடத்தலில் ஈடுபட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த சர்ஃப்ராஷ் அலி(39), கர்நாடக மாநிலம் மைசூரில் சேர்ந்த அர்பாஸ்(25), நைஜர் மற்றும் முகமத் (25) ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.
தொடர்ந்து, காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், காரில் கடத்தப்பட்ட சந்தனக்கட்டைகள் விஜயவாடா கோயிலில் இருந்து சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு முறையாக கொண்டு செல்லப்படுவதாகவும், அடுத்தகட்ட விசாரணைகளில் முழு தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'பொள்ளாச்சி: கனமழையால் மரம் விழுந்து இருசக்கர வாகனங்கள் சேதம்!'