திருவள்ளூர்: ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஒன்பது பெண் ஊழியர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று (ஜனவரி 3) திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் குண்டர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 153, 153A, 124A, 505(1), ED 3, பேரிடர் மேலாண்மை பிரிவு 53 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் இருந்து தற்போது புழல் மத்திய சிறைக்கு சாட்டை முருகன் மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவல் : நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து!