திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை மருத்துவமனை பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு வழக்கப்படும் 4,200 மாத்திரைகள் திடீரென மாயமானதாக மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஆனந்தி (44) சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ.68 ஆயிரம் ஆகும்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மருத்துவமனை உதவியாளர் ராபர்ட் (40), கார்த்திகேயன் (36) ஆகியோர் மாத்திரைகைளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று (ஜூலை 1) ஆம் தேதி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக்கொன்ற தந்தை!