திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பூங்காக்கள் சிதிலமடைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த பூங்காக்கள் குடிமக்களின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது என சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பூண்டி ஏரியை பராமரித்து வரும் பொதுப்பணித் துறை அதிகாரி கருத்து தெரிவித்தபோது, நீர்த்தேக்கம், நீர்பிடிப்பு பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சிதிலம் அடைந்துள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படவுள்ளது என்றார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைந்து பூங்காவை புதுப்பிக்கவேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்ததுடன் பூங்காக்களுக்கு விடிவு வருமா என எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: ரோஜா பூங்காவில் கவாத்து பணி தொடங்கியது !