திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்க ஆயிரத்து 268 நிலையான மையங்கள், மக்கள் அதிகம் கூடுமிடங்களில் 58 மையங்கள், 50 நடமாடும் மையங்கள் என மொத்தம் ஆயிரத்து 373 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் கலந்துகொண்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், சொட்டு மருந்து போடாமல் விடுபட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில்சென்று சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், போலியோ இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இம்முகாமை தாய்மார்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பாப்பா ஆ காட்டு... ' - குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய அமைச்சர் கே.பி. அன்பழகன்..