திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் கிராமம் மீனாட்சி நகரில் வசிக்கும் தங்கராஜ் மகன் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் கண்ணன். இவர் மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பழைய இரும்பு கம்பெனிக்கு சென்று மாலை 7 மணியளவில் வீடு திரும்புவதை வழக்கம். அதுபோல், நேற்று (ஏப்.20) இரவு 12.00 மணியளவில் வீட்டிற்கு வெளியே நிறுத்திய இருசக்கர வாகனத்தை யாரோ அடையாளம் தெரியாத நபர் திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து, அவரது இரண்டு மகன்களாகிய கண்ணன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் காரில் திருடுபோன இருசக்கர வாகனத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு சிசிடிவியில் பதிவான காட்சியில் இருந்த ஒருவர் தங்களின் இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்டு மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச்சென்றுள்ளார்.
இதுகுறித்து கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்டவரைத் தேடி வருகின்றனர்.
முன்னதாக, இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச்செல்லும் காட்சிகள் வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தன. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்கெனவே, கண்ணனுக்குச் சொந்தமான லாரியில் இருந்து பேட்டரி திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வருசா வருசம் சம்பவமா வருதே' - திருடு போன பைக்கால் நொந்து போன 'குக் வித் கோமாளி' மணிமேகலை