ETV Bharat / state

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க தொலைபேசி, வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

திருவள்ளூர்: பொதுமக்கள் தேர்தல் விதி மீறல் குறித்த புகாரை தெரிவிக்க தொலைபேசி, வாட்ஸ் அப் எண்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Mar 1, 2021, 7:57 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 3,622 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கூடுதலாக 1,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இதற்காக 044 2766 1950, 044 2766 1951 என்ற தொலைபேசி எண்கள், 94459 11161, 94445 911162 என்ற வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை 50 ஆயிரத்திற்கும் மேல் செய்பவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கையூட்டுப் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணை வழங்கல் - திமுக எம்எல்ஏ புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.