திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாநாடு நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அரசு மீட்க வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் மாவட்ட செயலாளர் கோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பஞ்சமி நிலங்களை மீட்க வருகிற ஜனவரி 25ஆம் தேதி சென்னையிலுள்ள மாநில நிலவள ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை மீட்கவும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.
இதையும் படிக்க: ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு