திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை சார்பில் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு மற்றும் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்ட துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்தப் பேரணியில் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியை திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஊட்டச்சத்து உணவு மற்றும் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படியுங்க:
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி